அரசு வேலைக்காக 73,31,302 பேர் காத்திருப்பு

 

தமிழகத்தில் அரசு வேலைக்காக 73 லட்சத்து 31 ஆயிரத்து 302 பேர் காத்திருப்பதாக மாநில வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து அரசு வேலைக்காக 73 லட்சத்து 30 ஆயிரத்து 302 நபர்கள் காத்திருப்பதாகவும், அதில் 34 லட்சத்து 41 ஆயிரத்து 360 பேர் ஆண்கள் என்றும் 38 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் பெண்கள் என்றும் எஞ்சிய 227 பேர் மூன்றாம் பாலினத்தவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26 லட்சத்து 86 ஆயிரத்து 932 பேர் 24 முதல் 35 வயது வரையுள்ளவர்கள் என்றும் 12 லட்சத்து 97 ஆயிரத்து 693 பேர் 36 முதல் 57 வயது வரை உள்ளவர்கள் என்றும் 11 ஆயிரத்து 245 பேர் 58 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 871 மாற்றுத்திறனாளிகள் பதிவு செய்து காத்திருப்பதாகவும், 3 லட்சத்து 56 ஆயிரத்து 140 பட்டதாரி ஆசிரியர்களும், 2 லட்சத்து 66 ஆயிரத்து 386 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் பதிவு செய்து காத்திருப்பதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!