போராடிய விவசாயிகள் இறப்பு குறித்து ஹரியானா அமைச்சர் கருத்து…விவசாய சங்கங்கள் கடும் கண்டனம்

புதுடெல்லி,

போராட்டத்தில் இறந்த விவசாயிகள் குறித்து ஹரியானா அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான சம்யுக்தா கிசான் மோர்சா (எஸ்.கே.எம்) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது

ஹரியானா மாநில வேளாண் துறை அமைச்சர் ஜே.பி. தலால், சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, போரட்டத்தில் இறந்த விவசாயிகள், போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தாலும் இறந்து போயிருப்பார்கள் என கூறினார்.

இதற்கு எஸ்கேஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விவசாயத் தலைவர் தர்சன் பால் கையொப்பமிட்ட அறிக்கையை அது வெளியிட்டு உள்ளது. அதில், இன்று கர்னல்லில் நடந்த விவசாயிகள் மகாபஞ்சாயத்தில், உயிர்த்தியாகம் செய்த இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மரியாதைக்கு உரிய விதத்தில் நினைவு கூர்ந்ததாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

பாஜகஆர்எஸ்எஸ் போல் போலி தேசியவாதம் பேசாமல், இந்த நாட்டின் விவசாயிகள் நாட்டின் இறையாண்மையை, ஒற்றுமையை, மரியாதையைக் காக்க அர்ப்பணிப்புடன் செயல்பட்டுவருவதாக கூறப்பட்டு உள்ளது.

போராட்டத்தின் போது எத்தனை விவசாயிகள் இறந்தனர் என்ற தகவல் தெரியாது என நாடாளுமன்றத்தில் வெட்கமில்லாமல் மத்திய அரசு தெரிவித்துள்ளது எனவும் அரசின் இந்த செயலுக்கு கண்டனங்களையும் பதிவு செய்துள்ளது.

மேலும், எஸ்.கே.எம் தனி இணைய பிளாக்கை கையாண்டு வருகிறது. அதில் எத்தனை பேர் இறந்தனர் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது என கூறியுள்ளது. அரசின் இதுபோன்ற உணர்வற்ற நிலை தான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம் என அறிக்கை கூறப்பட்டு உள்ளது.

 

Translate »
error: Content is protected !!