கோவையில் 123 ஜோடிகளுக்கு அதிமுக சார்பில் இலவச திருமணம்…..சீர் வரிசை கொடுத்து ஆசிர்வதித்த ஈபிஎஸ், ஓபிஎஸ்

சென்னை,

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கோவையில்123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் .பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் கோவை செட்டிப்பாளையத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் .பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.

வரும் 24ஆம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனால் அதிமுக சார்பில் ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து கோவையில் 123 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க முடிவான நிலையில் திருமணத்தில் பங்கேற்க தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட அனைத்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்நிலையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அதிமுக சார்பில் 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் இன்று நடைபெற்றது. ஜெயலலிதா பிறந்தநாள் விழா வருகிற 24ஆம் தேதி நடைபெறுகிறது.

இதை முன்னிட்டு 123 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்தார். அதன்படி கோவைசிறுவாணி ரோடு பேரூர் செட்டிப்பாளையத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டது. அங்கு இன்று காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் 123 ஜோடிகளுக்கும் திருமணம் நடைபெற்றது

123 ஜோடிகளுக்கும் அதிமுக சார்பில் 73வகை சீர்வரிசை பொருட்களை முதல்வர், துணை முதல்வர் வழங்கினார். திருமண ஜோடிகளுக்கு கட்டில், பீரோ, மெத்தை, சூட்கேஸ், கியாஸ் ஸ்டவ், சில்வர் குடம், குக்கர் உள்பட 73 வகையான சீர்வரிசை பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

 

Translate »
error: Content is protected !!