வாஷிங்டன்,
இந்திய வம்சாவளியை சேர்ந்த 200 பேர் 15 நாடுகளில் தலைமைப் பதவிகளை ஆக்கிரமித்து உள்ளனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட இந்தியாஸ் போராஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது.
இவர்களில், 60 பேர் அமைச்சரவை தரவரிசையில் உள்ளனர் என்றும் கூறியுள்ள இந்தியாஸ் போராஸ் நிறுவனம் அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த தலைவர்கள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வருகிறார்கள்” என்று இந்தியாஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. நமது நாட்டை சேர்ந்த பலர் பிரபல நிறுவனங்களில், பல்வேறு நாடுகளின் அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளை அலங்கரித்து வருகின்றனர்.
சமீபத்தில் அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட இந்தியா வம்சாவளியும் தமிழகத்தை பூர்விமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ், கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை ஆகியோரே இதற்கு சான்று.
இந்த நிலையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 200 பேர் 15 நாடுகளில் தலைமைப் பதவிகளை ஆக்கிரமித்து உள்ளனர் என்று அமெரிக்காவை மையமாக கொண்ட இந்தியாஸ் போராஸ் என்னும் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, கனடா உள்பட 15 நாடுகளில் 200-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் தலைமைப் பதவிகளை வகிக்கின்றனர் என்றும் இவர்களில், 60 பேர் அமைச்சரவை தரவரிசையில் உள்ளனர் என்றும் கூறியுள்ள இந்தியாஸ் போராஸ் நிறுவனம் அவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்பட பலர் இந்த பட்டியலில் உள்ளனர். இந்த பட்டியலில் ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் இந்திய வம்சாவளியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு ஊழியர்கள் உள்ளனர்.
பட்டியலில் உள்ள அதிகாரிகள் மொத்தமாக 587 மில்லியனுக்கும் அதிகமான தொகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். மேலும் அவர்கள் இருக்கும் நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 டிரில்லியன் அமெரிக்க டாலர்களைக் கொண்டுள்ளன, இது உலகளவில் இந்த தலைவர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை நிரூபிக்கிறது என்று இந்தியாஸ் போராஸ் நிறுவனம் கூறியுள்ளது.
இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்த தொழில் வல்லுநர்களும் உள்ளனர். ”உலகின் பழமையான ஜனநாயகத்தின் துணைத் தலைவராக இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர்(கமலா ஹாரிஸ்) இருப்பது மிகவும் பெருமைக்குரியது.
இந்த தலைவர்கள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வருகிறார்கள்” என்று இந்தியாஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார். இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்களும், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்த தொழில் வல்லுநர்களும் உள்ளனர்.
‘உலகின் பழமையான ஜனநாயகத்தின் துணைத் தலைவராக இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவர்(கமலா ஹாரிஸ்) இருப்பது மிகவும் பெருமைக்குரியது. இந்த தலைவர்கள் வருங்கால சந்ததியினருக்கான ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி வருகிறார்கள்” என்று இந்தியாஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.