தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் ஏ.சி. பயன்படுத்த அனுமதி….தமிழக அரசு

சென்னை,

தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் .சி. பயன்படுத்த அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் .சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் .சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம்.

65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு (2020) மார்ச் 25 முதல் 702 .சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பணம் கொடுத்து டிக்கெட்டுகளை வாங்குவதைத் தவிர்க்கும் விதத்தில் நகர / டவுன் பேருந்துகளில் மாதாந்திர பாஸ்கள் வழங்கப்படும். எங்கெங்கு சாத்தியமோ அங்கெல்லாம் டிக்கெட் மற்றும் பாஸ் வழங்கப்படும். கவுண்டர்களிலும், பேருந்தின் உள்ளேயும்க்யூ ஆர் கோட்பேனல்கள் அறிமுகப்படுத்தப்படும்.

இது பயணிகளுக்கும், கண்டக்டர்களுக்கும் சவுகரியமாக இருக்கும். ஒவ்வொரு ட்ரிப் துவக்கதிலும், முடிவிலும் அதாவது வண்டியை எடுக்கும்போது பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும். பின்பக்கம் வழியாக பயணிகள் பேருந்துக்குள் ஏற வேண்டும். முன்பக்கம் வழியாக இறங்க வேண்டும். முன்பக்கம் ஏறுமிடத்திலும், பின் பக்கம் இறங்குமிடத்திலும் கிருமி நாசினி (சானிட்டைசர்) வைக்கப்பட்டிருக்கும்.

அதைப் பயணிகள் பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க பயணிகள் உட்காரும் இருக்கை எது, காலியாக விட்டிருக்கும் இருக்கை எது என்பது குறிப்பிட்டுக் காட்டப்பட வேண்டும். வேலையைத் துவக்குவதற்கு முன்னால் பேருந்தின் டிரைவர், கண்டக்டர் ஆகியோரின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும். அதேபோல பேருந்து கண்டக்டர் டிரைவர் இருவரும் முகக்கவசமும், கையுறையும் அணிந்திருக்க வேண்டும். முகமூடி அணியும்படியும், பேருந்துக்குள் ஏறும்போது கிருமிநாசினியைப் பயன்படுத்தும்படி பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள்.

 

Translate »
error: Content is protected !!