கிளினிக்கல் லேப் பெயரில் விபசாரம்: 4 பெண்கள் உள்பட 7 பேர் கைது

சென்னை வடபழனியில் கிளினிக்கல் லேப் பெயரில் போலி பரிசோதனை மையம் நடத்தி பாலியல் தொழிலில் 4 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, வடபழனி, குமரன் காலனி 2வது தெருவில் உள்ள கிளிக்கல் லேப் பெயரில் மசாஜ் பார்லரில் விபசாரம் நடப்பதாக சென்னை திநகர் துணைக்கமிஷனர் ஹரிகிரன் பிரசாத்துக்கு புகார் வந்தது. அதன்பேரில் விருகம்பாக்கம் போலீசார் அந்த லேப்பை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக
பாடி மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடைபெறுவது தெரியவந்தது. அதன்பேரில் அங்கு போலீசார் அதிரடியாக  நுழைந்து சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்து 3 பெண்கள், மசாஜ் மற்றும் பாலியல் தொழில் நடத்தி வந்த எலக்ட்ரீஷியன் மாரிமுத்து மற்றும் மசாஜ் தொழில் தெரிந்த கவிதா, வாடிக்கையாளிகள் மூவர் என மொத்தம் 7 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சித்தகவல்கள் வெளியாகின.

கொரோனாவை பயன்படுத்தி ஊரடங்கில், லேப் பெயரில் மசாஜ் சென்டர் சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மாரிமுத்து, கவிதா இருவரும் சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சென்னை புழல்
சிறையில் அடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களாக மசாஜ் செய்ய வந்த ஐடி ஊழியர் சிவக்குமார், ஓட்டுனர் ராஜா பிரபு ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து காவல் நிலைய ஜாமினில் போலீசார் விடுவித்தனர். மேலும் மீட்கப்பட்ட 3 பெண்களையும் மயிலாப்பூர் பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பப்பட்டனர். கொரோனா ஊரடங்கு காலத்தில், பரிசோதனை மையம் என்ற பெயரில் போலீசாரை ஏமாற்றி பாலியல்
தொழில் நடத்தியது அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!