தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைதோர் எண்ணிக்கை 8.31 லட்சமாக உயர்வு

சென்னை,

தமிழகத்தில் 8 லட்சத்து 31 ஆயிரத்து 706 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 49 ஆயிரத்து 995 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 275 ஆண்கள், 177 பெண்கள் என மொத்தம் 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 154 பேரும், கோவையில் 45 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், குறைந்தபட்சமாக கரூர், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் தலா இருவரும், தூத்துக்குடி, தென்காசி, கள்ளக்குறிச்சி, தர்மபுரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூரில் நேற்று புதிதாக பாதிப்பு இல்லை. தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 48 ஆயிரத்து 275 ஆக உள்ளது. கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,460 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 460 பேர் நேற்று குணமடைந்துடிஸ்சார்ஜ்செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 8 லட்சத்து 31 ஆயிரத்து 706 பேர். தற்போது தமிழகத்தில் 4 ஆயிரத்து 109 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதில் 18 மாவட்டங்களில் 50க்கும் குறைவானவர்களே சிகிச்சை பெறுகிறார்கள். தற்போது 68 அரசு ஆய்வகங்கள், 188 தனியார் ஆய்வகங்கள் என 257 ஆய்வகங்கள் உள்ளன. மொத்தம் மாதிரி எடுக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1 கோடியே 68 லட்சத்து 5 ஆயிரத்து 946 ஆகும்.

 

Translate »
error: Content is protected !!