தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் ராமநாதபுரம் ஒன்றிய அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கூறும் போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் சட்டசபையில் 110 விதியில் சத்துணவு பொறுப்பாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அரசு ஊழியராக ஆக்குவேன் என்று உறுதி அளித்தார். ஆகவே முன்னாள் முதல்வர் கூறியதை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்
மேலும் அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் முறையான குடும்ப ஓய்வூதியத்தை அறிவித்திட வேண்டும் பணி ஓய்வு பெறுகின்ற போது பணி கொடையாக சத்துணவு பொறுப்பாளர்களுக்கு 10 லட்சமும் உதவியாளர்களுக்கு 5 லட்சமும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டு சத்துணவு ஊழியர்கள் கோஷங்கள் எழுப்பி மறியலில் ஈடுபட்டனர். பின்பு அவர்களை கைது செய்து தனியார் மஹாலில் அடைத்தனர்.