செய்தித்துளிகள்……..

# அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு-உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு-ஐநா சபையின் உலக உணவுத் திட்ட அமைப்பிற்கு நோபல் பரிசு அறிவிப்பு

# மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடிகர் சிம்பு சாமி தரிசனம்

# பரோலில் வீட்டுக்கு சென்றார் பேரறிவாளன்:- உற்சாக வரவேற்பு.

# வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக கைகாட்டும் கட்சியே ஆட்சி அமைக்க முடியும்.- தமிழக பாஜக தலைவர் முருகன்

# கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தேசத்தின் பெருமிதம்:- மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

# ஆப்கானிஸ்தான் உயர் கவுன்சில் தலைவர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருடன் ஹைதராபாத் மாளிகையில் சந்திப்பு.

# இந்தியாவில் இதுவரை ஒரு லட்சத்து 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலி – ஒரே நாளில் 70,496 பேருக்‍கு பெருந்தொற்று

# மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் மறைவுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

# சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் கணவன் நாராயணன்(70)-மனைவி மனோன்மணி(48) இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

# திருப்பூரில் ராம்ராஜ் நிறுவன பெயரை பயன்படுத்தி போலியாக மாஸ்க் தயாரித்த 3 பேர் கைது.

# அரியலூரில் அரசு நிலத்தை தனிநபருக்கு பட்டா மாற்றம் செய்ய உடந்தையாக இருந்த கடுகூர் வி.ஏ.ஓ. ராணி சஸ்பெண்ட்

# ஓசூர் காவல் நிலையங்களில் புகார் கொடுத்தால், புகார் கொடுத்தவரின் வீட்டிற்கே போலீசார் நேரடியாக சென்று விசாரிக்கும் நடைமுறை இன்றுமுதல் அமல்!பொதுமக்கள் பாராட்டு!

# தொல்லியல் பட்டயபடிப்பில் சேருவதற்கான தகுதியில் தமிழ்மொழியை தவிர்த்த அதிகாரி யார்?:ஐகோர்ட் கிளை #நீதிபதிகள் சரமாரி கேள்வி

# தொல்லியல் துறை பட்டப்படிப்புக்கான கல்வித் தகுதியில் தமிழ் மொழியை சேர்த்தமைக்கு எனது மனமார்ந்த நன்றி :-பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்

# முழுமையாக நிறைவேறாத கால்வாய் திட்டங்கள் தொடர்மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்.- காரியாபட்டி அருகே விவசாயம் பாதிப்பு

# முழுமையாக நிறைவேறாத கால்வாய் திட்டங்கள் தொடர்மழை பெய்தும் நிரம்பாத கண்மாய்கள்.- காரியாபட்டி அருகே விவசாயம் பாதிப்பு

# நாளை முதல் ரயில் புறப்படுவதற்கு 5 நிமிடத்துக்கு முன்பு வரை டிக்கெட் பெறலாம்:  ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு

# திருச்சுழி அருகே அரசு நீதி வீணடிப்பு செயல்படும் முன்பே சிதைந்த பள்ளிக்கட்டிடம்- பிள்ளைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு

# லட்சுமியாபுரம் புதூர் கிராமத்திற்கு அடிப்படை வசதி அறவே இல்லை- கண்டித்து அக்.15 ல் யூனியன் அலுவலகம் முற்றுகை

# மறைந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் உடலுக்கு காங். தலைவர் ராகுல்காந்தி நேரில் அஞ்சலி

# தோகைமலை பகுதியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம்

# ஒட்டன்சத்திரம் பகுதியில் பூசணிக்கு விலையில்லை:-விவசாயிகள் கவலை-சாகுபடி செலவுகூட கிடைக்கவில்லை

# கிரிக்கெட்டிற்கு மட்டும் முக்கியத்துவம் தராதீர்… கபடி, கால்பந்து, ஹாக்கி விளையாட்டு களுக்கும் முன்னுரிமை வழங்குக :- நீதிபதிகள் வேண்டுகோள்.

# சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் குன்னூர் சிம்ஸ் பூங்கா வெறிச்சோடியது

# மேட்டூர் அணை திறந்து 4 மாதமாகியும் தண்ணீர் நிரம்பாத குளங்களால் நீர்மட்டம் குறைவு- 100 நாள் திட்டத்தில் தூர்வார கோரிக்கை

# +1, +2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் அக்.14 முதல் வழங்கப்படும்:- பள்ளிக்கல்வித்துறை

# தஞ்சை- மயிலாடுதுறை இடையே 70 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்சார ரயில் இயக்குவதற்கான இறுதிக்கட்ட பணி மும்முரம்.

# அன்னப்பன்பேட்டையில் கொள்முதல் செய்த நெல்மணிகள் மழையில் நனையும் அவலம்- நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்

# காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,000 கனஅடியில் இருந்து 20,000 கனஅடியாக அதிகரிப்பு..!

# கால்நடை தீவன விவகாரத்தில், சாய்பாசா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

# சூடுபிடிக்கும் கேரள தங்க கடத்தல் விவகாரம்- ஐஏஎஎஸ் அதிகாரி சிவசங்கரனிடம் 2வது முறையாக விசாரணை.

# நடிகர் சூரியின் குற்றச்சாட்டுக்கு விஷ்ணுவிஷால் பதில்..!-நடிகர் சூரி தான் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு முன்பணத்தை திரும்பி தரவேண்டும்

# மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் வகித்து வந்த உணவுத்துறையை பியூஸ் கோயல் கூடுதலாக கவனிப்பார்.- குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவிப்பு

# பெங்களூரு ரோஸ் வெங்காயம் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி.-வெங்காயத்தின் விலை அதிகரித்ததை அடுத்து கடந்த மாதம் 14ம் தேதி, வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டது.

# திமுகவுடனும் கூட்டணிக்கு வாய்ப்பு என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியது, கல்யாண வீட்டிற்கு சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்துவிட்டு செல்வதுபோல் உள்ளது.- அமைச்சர் ஓஎஸ்.மணியன்

# தமிழகத்தில் பாரம்பரியமிக்க கோயில்களில் சிறப்பு பூஜைக்கு ரஜினி குடும்பத்தினர் ஏற்பாடு:- பிரசாதம் அனுப்பும் மன்ற நிர்வாகிகள்

# நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு-நீர்த்தேக்கத்தில் இருந்து 20 நாட்களுக்கு மிகாமல் 224.64 மி.கன அடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

# நிலம் வாங்கி தருவதாக கூறி நகைச்சுவை நடிகர் சூரியிடம் 2.70 கோடி மோசடி;-இரண்டு பேர் மீது அடையார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுபடத்தில் நடித்ததற்கு சம்பளம் பாக்கி இருந்த நிலையில் நிலம் வாங்கி தருவதாக மோசடி

# இந்திய வெளியுறவு சேவை நாளான இன்று ஐ.எஃப்.எஸ் அதிகாரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் – பிரதமர் மோடி-வந்தே பாரத் மிஷன் மற்றும் பிற நாடுகளுக்கு கொரோனா தொடர்பான பிற உதவிகளின் போது அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை

# கர்நாடகா: அக்டோபர் 4 ம் தேதி துபாயிலிருந்து மங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணியிடமிருந்து ரூ .25,45,920 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. பயணி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டா

# அந்தமானை ஒட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதுபுதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

 

 

 

 

Translate »
error: Content is protected !!