அதிமுக கொடுக்கும் 15 சீட்…. தனித்து போட்டியிடுவதா.. இல்ல..? தேமுதிகாவின் முடிவு..?

சென்னை,

தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெறுவது பற்றி மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்டு முடிவெடுக்கப்பட உள்ளது.

இது தொடா்பாக தேமுதிக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிப்பிர்ல தேமுதிக மாவட்டச் செயலாளா்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

சட்டப்பேரவைத் தோ்தல் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. மாவட்டச் செயலாளா்கள் அனைவரும தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக கூட்டணியை உறுதி செய்ய இதுவரை 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்துள்ளது.

ஆனால் கூட்டணியை உறுதி செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் தேமுதிக எடுக்கவில்லை. தேமுதிக தரப்பில் 23 தொகுதிகள் வரையும் ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவியும் கேட்கப்படுவதாக சொல்லப்படுகிறது.

ஆனால் அதிமுக தரப்பில் 13 –இல் இருந்து 15 வரையே தொகுதிகள் ஒதுக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தொடா்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்நிலையில், தேமுதிகவின் மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று நடக்கிறது.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் தேமுதிக துணைப் பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட செயலாளர்களை ஆலோசித்து பேசி கூட்டணி குறித்து தேமுதிக முடிவெடுக்க உள்ளது.

அதிமுகவை பொறுத்தவரை தேமுதிகவை தவிர மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்துவிட்டது. தேமுதிகவிற்கு தொகுதிகள் ஒதுக்காததா யாருக்கு எந்த தொகுதி என்று பிரிக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக கொடுக்கும் 15 சீட்டை வாங்கி கொண்டு கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட போகிறதா அல்லது தனித்து போட்டியிட போகிறதா என்பது இன்று நடைபெறும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.

 

Translate »
error: Content is protected !!