பஹ்ரைனில் JEE தேர்வு மையம்… வைகோ கோரிக்கை ஏற்பு

பஹ்ரைன் நாட்டில் உள்ள இந்திய சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 200க்கும் மேற்பட்ட மாணவர்கள், JEE பொறிஇயல் நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு, இணையவழியில் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால் தேர்வு மையங்கள் பட்டியலில் பஹ்ரைன் நாட்டில் ஒரு மையமும் அமைக்கப்படவில்லை. இதுகுறித்து பஹ்ரைன் மறுமலர்ச்சி தமிழர் பேரவைத் தோழர்கள் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.

வைகோ அவர்கள் இது தொடர்பாக, நடுவண் அரசின் கல்வி அமைச்சர் மற்றும் அயல் உறவு அமைச்சருக்கு மின்அஞ்சல் வழியாக கடிதம் எழுதி கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, பஹ்ரைன் நாட்டின் இந்தியத் தூதரக வளாகத்தில் தேர்வு மையம் அமைத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இந்தியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!