அரசு ஊழியரை தேர்தல் ஆணையராக நியமிக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி,

ஓய்வு பெற்ற ஐஏஎஸ், ஐஆர்எஸ் அதிகாரிகளையே தேர்தல் ஆணையராக நியமிப்பது வழக்கம். ஆனால் கோவா அரசு, அங்கு நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையராக அதன் நீதித் துறை செயலாளரை நியமிக்க முடிவெடுத்தது.

கோவா அரசு உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி, பெண்கள் பிரிவுக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து கோவா அரசுக்கு எதிராக அங்குள்ள பாம்பே உயர்நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவ்வழக்குத் தொடர்பாக பாம்பே உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவு கோவா அரசுக்கு எதிராக அமைந்தது. எனவே, அத்தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், பி.ஆர். கவாய், மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகிய மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு விசாரித்தது.

இந்நிலையில்அரசுப் பணியில் இருப்பவர்களை தேர்தல் ஆணையராக நியமனம் செய்வது அரசியலமைப்புச் சட்டத்தையே கேலிக்குரியதாக ஆக்குகிறது. அரசுப் பணியில் இல்லாத ஒருவரையே தேர்தல் ஆணையராக நியமிக்க வேண்டும்அந்த அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!