வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற உள்ளது.
லாஸ்ஏஞ்சலஸ்,
வரும் 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவை நடிகை பிரியங்கா சோப்ராவும் அவருடைய கணவரான பாடகர் நிக் ஜோனாசும் தொகுத்து வழங்க உள்ளனர்.
93வது ஆஸ்கர் விருதுக்கான படங்களின் பரிந்துரைகள் கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டன.இந்திய நேரப்படி வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த முறை விழா வழக்கம் போல நடத்தப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இருப்பினும் நேரலையாக ஆஸ்கர் நிகழ்ச்சிகளை சமூக ஊடகங்கள் வாயிலாக காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் விருது கொடுப்பதற்காக கலந்து கொண்ட பிரியங்கா சோப்ரா, இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட படங்களின் பட்டியலை வெளியிட்டார். ஆஸ்கர் போட்டியின் இறுதி பட்டியலில் இடம் பிடித்த நடிகர் சூர்யாவின் ‘சூரரைப்போற்று‘ திரைப்படம் ஆஸ்கர் விருது போட்டியில் இருந்து வெளியேறியது.