12 இந்திய குற்றவாளிகளின் வழக்கு விபரங்கள் அடங்கிய புத்தகம்.. வெளியிட்ட லண்டன்..!

லண்டன்,

பிரிட்டனில், நாடு கடத்தல் வழக்கை எதிர்கொண்ட, 12 இந்திய குற்றவாளிகளின் வழக்கு விபரங்கள் அடங்கிய புத்தகம், லண்டனில் வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஆய்வாளர்களான, டானிஷ் மற்றும் ருஹி கான் ஆகியோர், ‘எஸ்கேப்டு: ட்ரூ ஸ்டோரீஸ் ஆப் இந்தியன் பியுஜிட்டிவ்ஸ் இன் லண்டன்என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளனர்.

கடந்த, 70 ஆண்டுகளில், கொலைகள் முதல், வங்கிக் கடன் மோசடி வரை, பல குற்றங்களில் ஈடுபட்டு, இந்தியாவில் இருந்து பிரிட்டன் தப்பிவந்த பல குற்றவாளிகளில், 12 பேரை தேர்ந்தெடுத்து, இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

அவர்கள் செய்த குற்றம் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட நாடு கடத்தல் வழக்குகள் குறித்து, பல்வேறு ஆய்வுகள் செய்து எழுதப்பட்டுள்ளன.

இந்த, 12 வழக்குகளில், முன்னாள் கடற்படை அதிகாரி ரவி சங்கரன், இசைக்கலைஞர் நதீம் சைபி, நிழல் உலக தாதா இக்பால் மிர்ச்சி முதல், விஜய் மல்லையா, நிரவ் மோடி வரை, பல்வேறு வழக்குகள் குறித்து எழுதப்பட்டுள்ளது. இந்த புத்தகம், சமீபத்தில் லண்டனில் வெளியானது.

Translate »
error: Content is protected !!