மஹத்தின் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” – டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் வெளியிட்ட நடிகர் சிம்பு

மஹத் நடிக்கும் “காதல் கண்டிஷன்ஸ் அப்ளை” என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார்.

‘தல’ , ‘தளபதியுடன்’ சேர்ந்து நடித்தவர் இந்த மகத். இவர் சிம்புவின்  நெருங்கிய சிநேகிதன்.. சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில், மகத் நடிப்பில் உருவாகி வரும்காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தின் டைட்டில் லுக் போஸ்டரையும், மோஷன் போஸ்டரையும் நடிகர் சிம்பு வெளியிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வெளியீட்டு உரிமையையும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது..

படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் சிலம்பரசன். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!