சிவாஜி படப்பிடிப்பில் விவேக்குடன் நடித்த ஒவ்வொரு நாட்களையும் மறக்க முடியாது – ரஜினிகாந்த் இரங்கல்

நடிகர் விவேக்கின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழந்த இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார்.

விவேக்கின் மறைவுக்கு பலரும் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,  நடிகர் ரஜினி தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும்’ என ரஜினிகாந்த் பதிவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!