காவல் அதிகாரி திருநாவுக்கரசு எழுதிய வீர வணக்கநாள் பாடல்

தமிழக சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு எழுதிய வீர வணக்க நாள் பாடல் வீடியோவை டிஜிபி திரிபாதி நேற்று வெளியிட்டார்.

 

பணியின் போது உயிர் நீத்த காவல் அதிகாரிகள், ஆளிநர்களின் நினைவு நாள் நேற்று இந்தியா முழுவதும் வீர வணக்க நாள் கொண்டாடப்பட்டது. இன்று காலை டிஜிபி திரிபாதி உள்ளிட்ட போலீஸ் உயரதிகாரிகள் தியாகிகளின் நினைவுச் சின்னத்துக்கு
நினைவஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் வீர வணக்க நாளை முன்னிட்டு தமிழக, சட்டம் ஒழுங்கு உதவி ஐஜி திருநாவுக்கரசு பாடல் இயற்றி அதனை பாடி வெளியிட்டுள்ளார். அதன் வெளியீட்டு விழா நேற்று டிஜிபி திரிபாதி முன்னிலையில் நடைபெற்றது.

‘தன்னுயிர் தந்து தேசம் காத்த’ என தொடங்கும் அந்த பாடலில், ‘‘தேசம் காத்திட்ட வீரமே, நேசம் வளர்த்திட்ட வீரமே, ஈடில்லாத மனிதமே, அற்புதமான புனிதமே’’ என்ற வரிகள் கேட்போரையும், காண்பவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. யூடியூப் இணையதளத்தில் திருநாவுக்கரசுவின் இந்த பாடல் வரிகள் வைரலாக பரவி வருகிறது. இப்பாடலுக்கு ரித்தேஷ் இசையமைக்க, ராமச்சந்திரன் ஔிப்பதிவு செய்ய ஐபிஎஸ் அதிகாரி திருநாவுக்கரசு, யஷ்வந்த்குமார், ஹேம மீனாட்சி மற்றும் மணிகண்டன் ஆகியோர் பாடியுள்ளனர். https://youtu.be/E8QcXArLpBA என்ற இணையதளத்தில் அந்த பாடலை பொதுமக்கள் கண்டு களிக்கலாம்.

Translate »
error: Content is protected !!