பூதாகரமாகும் ஆக்ஸிஜன் விவகாரம் – டிடிவி தினகரன் கண்டனம்..!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆக்ஸிஜன் தேவையும் தற்போது அதிகரித்துள்ளது.

இந்நிலையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும் போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது என டிடிவி தினகரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 11,681 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை10,25,059ஆக உயர்ந்துள்ளது. நேற்று 7,071 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 9,27,440ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 53பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை13,258 ஆக உயர்ந்துள்ளது. இதனால், ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களுக்கு ஆக்சிஜன் தேவை இருக்கும்போது தமிழக அரசு நிர்வாகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்ஸிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது.

இத்தகைய செயலினை எந்தக் காரணத்திற்காகவும் ஏற்க முடியாது. தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் இருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. அதேபோல் கொரோனா தடுப்பூசியின் விலையை அவரவர் இஷ்டம்போல நிர்ணயிப்பதையும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!