சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரப்படி சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு 3,05,570 ஆக அதிகரித்துள்ளது. தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31,506 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை கொரோனாவுக்கு 4,538 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பான3,05,570 பேரில் 2,69,526 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று(ஏப்ரல் 24)மட்டும் 20,012 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மண்டலவாரியாக கொரோனா  பாதிப்பு விவரத்தையும் சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதில் அண்ணா நகர், தேனாம்பேட்டையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 3,318 பேரும் அண்ணா நகரில் 3,295 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 6 மண்டலங்களில் பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. திருவிக நகர் – 2,952, கோடம்பாக்கம் -2,794, ராயபுரம் -2,520, அம்பத்தூர்-2,413 தண்டையார்பேட்டை-2,203, அடையாறு-2,318 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!