தமிழகத்தில் 3,057 பேருக்கு கொரோனா! ஒரே நாளில் 4,262 பேர் குணமடைந்தனர்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் தொற்றால் 3,057 பேர் பாதிக்கப்பட்டனர்; பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து 5வது நாளாக இன்றும் 4 ஆயிரத்திற்கு கீழ் குறைந்திருப்பது, சற்று நிம்மதியை தந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் வரை கிடுகிடுவென்று அதிகரித்து வஹ்ந்த கொரொனா பாதிப்பு, அரசின் தொடர் நடவடிக்கைகளால் சில நாட்களாக கட்டுக்குள் இருந்து வருகிறது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 5 நாட்களாக 4 ஆயிரத்திற்கும் கீழ் இருந்து வருகிறது.

அதன்படி தமிழகத்தில் இன்றும் 4 ஆயிரத்திற்கும் குறைவாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று 3,057 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,03,250ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் இன்று 844 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவுக்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,828 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இன்று ஒரே நாளில் 4,262 பேர் குணமடைந்ததால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 59 ஆயிரத்து 432 ஆக அதிகரித்துள்ளது. இந்த புள்ளி விவரங்கள் தமிழக சுகாதாரத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் , ஆந்திரத்தில் இன்று புதிதாக 3,765 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 8,00,684 ஆக உயர்ந்துள்ளது. இதில் 31,721 பேர் சிகிச்சையில் உள்ளனர். 7,62,419 பேர் குணமடைந்துள்ளனர், 6,544 பேர் பலியாகியுள்ளனர்.

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,356 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; 51 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகத்தில் இதுவரை மொத்தம் 7,93,907 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 6,93,584 பேர் குணமடைந்துள்ளனர், மொத்த பலி எண்ணிக்கை, 10,821 ஆகும்; 89,483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!