செங்குன்றத்தில் ஆக்சிஜன் இல்லாமல் திகைத்து போன நோயாளிகள்.. தக்க நேரத்தில் காப்பாற்றிய காவல் துறையினர்

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் காவல்துறையினரின் துரிதமான செயல்பாட்டினால், கொரோனா நோயாளிகள் காப்பற்றப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த செங்குன்றம் சந்திப்பு சாலையில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் 21 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 16 பேர் சாதாரண படுக்கைகளிலும், 5 பேர் அவசர பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, செய்வதறியாது மருத்துவமனை நிர்வாகம் திகைத்தபோது, நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாக மாதவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, விரைந்து வந்த மாதவரம் காவல் நிலைய உதவி ஆணையர் அருள் சந்தோஷமுத்து மற்றும் மாதவரம் காவல்நிலைய ஆய்வாளர் காளிராஜ் விவரங்களை கேட்டறிந்து, உடனடியாக புழல் பகுதியில் உள்ள தனியார் ஆலையில் இருந்து ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதனால், பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்ட நோயாளிகள் உரிய நேரத்தில் காப்பாற்றப்பட்டனர். காவல் துறையினரின் இத்தகைய செயலுக்கு நோயாளிகளின் உறவினர்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.

Translate »
error: Content is protected !!