வீரமரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் புகைப்படக் கண்காட்சி: கமிஷனர் தொடங்கி வைத்தார்

காவல் பணியில் வீரமரணமடைந்த காவலர்களின் புகைப்பட தொகுப்பு மற்றும் தியாக விவர குறிப்புகள் அடங்கிய கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் திறந்து வைத்தார்.

1959 ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில் சீன இராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின் போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம்தேதி “ காவலர் வீர வணக்க நாள்” அனுசரிக்கப்படுகிறது. மேலும் காவலர் வீர வணக்கநாள் இந்தாண்டு 21.10.2020 முதல் 31.10.2020 வரை அனுசரிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோட்டூர்புரம், மத்திய கைலாஷ் சாலை சந்திப்பு அருகில் உள்ள இடத்தில் சென்னை பெருநகர காவலில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவல் ஆளிநர்களின் புகைப்பட தொகுப்புகள் மற்றும் தியாகம் சார்ந்த குறிப்புகளை பொதுமக்கள் ஒரு வாரம் பார்வையிடவும், அஞ்சலி செலுத்தவும், கண்காட்சி அரங்கை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் இன்று (23.10.2020) மாலை திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்வின் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) தினகரன், இணை ஆணையாளர் (கிழக்கு) சுதாகர், ஆயுதப்படை துணை ஆணையாளர் சவுந்தர்ராஜன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!