கோவையில் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சை மையத்தில் கூடுதல் படுக்கை வசதிகள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

முதல்வர் மு..ஸ்டாலின் கோவை மாவட்டம், கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை, மதுக்கரை அரசு மருத்துவமனை ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், காருண்யா கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகம், கொடிசியா வளாகம், அண்ணா பல்கலைக்கழகம் கோவை, தமிழ்நாடு வோளண்மை பல்கலைக்கழகம், சீனிவாச கல்யாண மண்டபம் (சித்தா முறை சிகிச்சை மையம்), காரமடை வித்ய விகாஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்களிலும், 67 தனியார் மருத்துவமனைகளிலும், 10 தனியார் தங்கும் விடுதிகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, தற்போது 22,852 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் 1001 நபர்கள், .எஸ். மருத்துவமனையில் 810 நபர்கள், பொள்ளாச்சி மாவட்ட தலைமை மருத்துவமனையில் 120 நபர்கள், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை (ஹிந்துஸ்தான் வளாகம்) 80 நபர்கள், 6 தற்காலிக சிறப்பு சிகிச்சை மையங்களில் 2034 நபர்கள், 67 தனியார் மருத்துவமனைகளில் 4672 நபர்கள், 16 தனியார் விடுதிகளில் 589 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களில் 4709 நபர்கள் பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர்கள் ஆவார்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், படுக்கை வசதிகளை அதிகரிக்கும் வகையில், முதலமைச்சர் மு.. ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர் மாவட்டம், கொடிசியா வளாகத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் ஏற்கனவே 676 படுக்கை வசதிகள் இருந்த நிலையில், கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 820 படுக்கை வசதிகளையும், குமரகுரு பொறியியல் கல்லூரியில் புதிதாக 360 படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின்போது வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி, செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், வனத் துறை அமைச்சர் கா. ராமச்சந்திரன், உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கோயம்புத்தூர் மாவட்ட கலெக்டர் எஸ். நாகராஜன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Translate »
error: Content is protected !!