வீடுகள் தோறும் விநியோகம் செய்யும் வியாபாரிகளுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம்

கடை உரிமையாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு நோய்த்தொற்று இல்லை என்று சான்று வந்த பின்பே அனுமதிக்கப்பட்டதாகவும் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு நகராட்சி அலுவலகத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால் எந்த கடைகளுக்கும் திறக்க அனுமதி அளிக்கப்படாத நிலையில் அத்தியாவசியப் பொருட்களான காய்கறி பொருட்களை வாகனங்களில் ஏற்றி நகராட்சி முழுவதிலும் உள்ள 30 வார்டுகளுக்கும் தனித்தனியே வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில்,

மளிகை பொருட்களை  வீடுகளுக்கே சென்று விற்பனை செய்ய உள்ள மளிகை கடை உரிமையாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் உள்ள படிவத்தில் பூர்த்தி செய்து வாகன அனுமதி பெற்று வீடுகள் தோறும் காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காய்கறி மற்றும் மளிகை பொருள் வணிகர்கள் சங்கத்தினர், பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நோய்த்தொற்றின் விதி முறைகளை கடைபிடித்து வீடுகள் தோறும் விநியோகம் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து காய்கறி கடைகள் மற்றும் மளிகை கடை உரிமையாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. கொரனோ பரிசோதனை முடிவுகளுக்கு பின்பு நோய் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பே காய்கறி மற்றும் மளிகை கடை உரிமையாளர்களுக்கு வீடுகள் தோறும் விநியோகம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். பெரியகுளம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் வணிகர் சங்க நிர்வாகிகள் காய்கறி கடை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

Translate »
error: Content is protected !!