அசாமில் டிஎன்எல்ஏ பயங்கரவாத அமைப்பினர் 6 பேர் சுட்டுக் படுகொலை

அசாம் ஐக்கிய விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்த உல்பா (இன்டிபென்டன்ட்) தீவிரவாத அமைப்பு வட கிழக்கு மாநிலங்களில் பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் அசாமின் பொருளாதார வளர்ச்சி தடை பட்டு வருகிறது. இதனால் அசாமில் உல்பா தீவிரவாதிகள் அசாம் வளர்ச்சிக்காக பயங்கரவாதிகள் அமைதிப்பாதைக்குத் திரும்ப வேண்டும் என மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

சமீபத்தின் அசாமின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற பாஜகவைச் சேர்ந்த ஹிமந்தா பிஸ்வா சர்மா வேண்டுகோள் உல்பா () பயங்கரவாதிகளுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதனை ஏற்ற உல்பா () அமைப்பினர் மூன்று மாத காலம் அமைதியை கடைபிடிப்பதாக அறிவித்தனர்.

ஆனாலும், வேறு சில அமைப்புகள் தொடர்ந்து வன்முறையை மேற்கொண்டு வருவதால், அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த அசாமின் மேற்கு கர்பி அங்லாங் மாவட்டத்தில், ஏடிஎஸ்பி பிரகாஷ் சோனோவால் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் துப்பாக்கிப்படையினர் இணைந்த கூட்டுக் குழு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்கினர்.

அசாம்நாகாலாந்து எல்லையில் பாதுகாப்பு படையினருடன் ஏற்பட்ட மோதலில் திமாசா தேசிய விடுதலை ராணுவம் (டி.என்.எல்.) என்னும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் மிச்சிபைலுங் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து 4 .கே.47 ரக துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அசாம் காவல்துறையைச் சேர்ந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!