உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.75 கோடியை கடந்துள்ளதாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 34.77 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனாவின், வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கடந்த ஆண்டு வைரஸ் தொற்று பரவி ஓராண்டு ஆகினாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. 2வது அலை உலகையே புரட்டிப்போட்டு வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில், பிரான்ஸ், துருக்கி ஆகிய நாடுகள் கொரோனா பரவலில் முதல் 5 இடங்களில் உள்ளன.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16.75 கோடியைக் கடந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 14.85 கோடிக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளதாகவும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 34.77 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், வைரஸ் பரவியவர்களில் 1.54 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 97 ஆயிரம் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.