கொரோனா நோயாளிகளை கண்டறிய மோப்ப நாய்கள் மூலம் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மோப்ப நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து அது தொடர்பான சோதனையிலும் வெற்றி பெற்றுள்ளளர்.

இங்கிலாந்தின் தலைநகரம் லண்டனில் உள்ள எல்எஸ்எச்டிஎம் பல்கலைகழகம் நடத்திய ஆராய்ச்சியில் பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் மூலம் ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர். அது தொடர்பாக எல்எஸ்எச்டிஎம் நோய் தடுப்பு பிரிவு தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறியதாவது:-

பொதுவாக நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம். அதனாலேயே அதனை காவல்துறையில் பிரதானமாக பயன்படுத்துகின்றனர். ஒருவரின் உடம்பில் இருந்து வெளிப்படும் வாசனை மூலமாக, அவருக்கு கோவிட்19 கிருமியின் பாதிப்பு உள்ளதா என்பதை நாய்கள் கண்டுபிடித்து விடுகின்றன. எங்கள் ஆய்வில் இது உறுதியாகியுள்ளது.

இதற்காக மருத்துவ கண்டுபிடிப்பு நாய்கள் பிரிவைச் சேர்ந்த பயிற்சியாளர்கள், நாய்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கினர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் உடை, முக கவசம், சாக்ஸ் உள்ளிட்டவற்றை நாய்களிடம் கொடுத்து அதனை முகர வைத்துள்ளனர். இதையடுத்து 3,758 பேரின் மாதிரிகள் ஆய்வுக்காக சேகரிக்கப்பட்டன. அவற்றில், கொரோனா நோயாளிகள் 325 பேர், நோயால் பாதிக்கப்படாத 675 பேரின் சளி மாதிரிகளை, நாய்கள் துல்லியமாக அடையாளம் கண்டன. இது மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் விமான நிலையங்களில் இந்த நாய்களை பயன்படுத்தி சுமார் 30 நிமிடங்களில் 350 பயணிகளிடம் கொரோனா பாதிப்பு  உண்டா இல்லையா என்பதை கண்டறிந்து விடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Translate »
error: Content is protected !!