ரிசர்வ் வங்கியின் நாணயக் குழுவின் ஒப்புதல் கிடைத்ததை அடுத்து, ஐசிஐசிஐ வங்கி இலங்கையில் தனது வங்கி சார்ந்த நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ, பல்வேறு உலக நாடுகளில் இயங்கி வருகிறது. அவ்வகையில், அண்டை நாடான இலங்கையிலும் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில் தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள முடிவு செய்த ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இதுதொடர்பாக கடந்த ஜனவரி மாதம்இலங்கை ரிசர்வ் வங்கியின் நாணயக் குழுவிடம் அனுமதி கேட்டிருந்தது.
இந்த கோரிக்கையை பரிசீலித்த இலங்கை ரிசர்வ் வங்கி, ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வணிக நடவடிக்கைகளை மூடுவதற்கு ஏதுவதாக, அதற்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி, இலங்கையில் வங்கி வணிகத்தை முன்னெடுக்க ஐசிஐசிஐ வங்கிக்கு வழங்கப்பட்ட உரிமம் 2020 அக்டோபர் 23 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
—