கன்னியாகுமரியை களங்கடித்த கனமழை: ஸ்தம்பித்துப்போன கிராமங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு, குடியிருப்புகளை நீர் சூழ்ந்து, பல இடங்களில் கிராமங்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்துப்போயின.

தொடர் புயல், வெப்பச் சலனம் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அதி கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதோடு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பன்றிக்கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு கிராமங்களுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கயிறு கட்டி பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

மேலும் முக்கடல் அணை ஒரே நாளில் பத்து அடி தண்ணீர் உயர்ந்து முழு கொள்ளளவான 25 அடியை எட்டியது. திருப்பதிச்சாரம் அருகே கண்டமேட்டுகாலணியில் அருள் என்ற கூலி தொழிலாளி வீட்டின் மீது தென்னை மரம் விழுந்ததால் வீட்டின் ஒரு பகுதி முழுவதும் சேதமானது. அதிர்ஷ்டவசமாக குடும்பத்தினர் அனைவரும் உயிர் தப்பினர். மாவட்டத்தில் பல இடங்களில் மின்சாரம் தடை செய்யபட்டு உள்ளதால் பல கிராமங்கள் இருளில் மூழ்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.

கனமழை காரணமாக நேற்று மாலை பேச்சிப்பாறை அணையின் நீர் மட்டம் 43.18 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வினாடிக்கு எட்டாயிரத்தி முன்னூறு கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!