சென்னையை அடுத்த ஆவடியில் உண்டியல் சேமிப்பை கொரோனா நிவாரண நிதிக்கு அளித்த 3 வயது சிறுமிக்கு அமைச்சர் நாசர் வாழ்த்து தெரிவித்தார்.
ஆவடி அடுத்த அய்யப்பக்கத்தை சேர்ந்த பிரம்குமார், சங்கீதா தம்பதியின் 3 வயது மகள் மித்துஷா கடந்த 6 மாதமாக உண்டியலில் சேமித்து வைத்த ஆயிரத்து 850 ரூபாயை பால்வளதுறை அமைச்சர் நாசரிடம் வழங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.