தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்படுகிறது .ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை இன்றி இருப்பதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது.
மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டநிலையில் சுற்று சூழல் மாசு அடைவது குறைந்ததுடன்கொடைக்கானல் மலை சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் விதவிதவிதமான பூக்கள் பூத்து குலுங்குகிறது. தற்போது இளம்சிவப்புநிறத்தில் காணப்படும் காகித பூக்கள் ஏரிசாலை ,பாம்பார்புரம்,அப்சர்வேட்டரி ,செண்பகனூர் ,பெருமாள்மலை , அட்டுவம்பட்டி ,சீனிவாசபுரம் உள்ளிட்டபகுதிகளில் கண்னை வியக்கும் வண்ணத்தில் அமைந்துள்ளது..மனிதர்கள் இயற்கைக்கு முரணாக செயல்பட்டாலும் இயற்கைமனிதனின் கண்களுக்கு விருந்தளித்தே வருகிறது ..