காப்பீட்டு ஊழியர் சங்கம் சேலம் கோட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சேலம் வடக்கு மாநகர் இணைந்து சேலம் மாநகர மக்களுக்கு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இலவச ஆம்புலன்ஸ் சேவையை LIC கோட்டம் அலுவலகத்தில் துவக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு AIIEA தென்மண்டல துனை தலைவர் தோழர் ஆர்.தர்மலிங்கம் தலைமைதாங்கினார்.
DYFI மாநகர தலைவர் பி.சதீஷ்குமார், மாநகர செயலாளர் ஆர்.குருபிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
AIIEA கோட்ட நிர்வாகி எம்.கே.கலைச்செல்வி மற்றும் DYFI மாநிலக்குழு உறுப்பினர் எம்.கற்பகம் கொடி அசைத்து துவக்கினார்கள்.
AIIEA கோட்ட தலைவர் ஆர்.நரசிம்மன் நன்றி கூறினார்.
இதில் CPIM மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.சேதுமாதவன், சேலம் வடக்கு மாநகர செயலாளர் என்.பிரவீன்குமார், DYFI மாவட்ட பொருளாளர் வி.வெங்கடேஷ், மாநகர பொருளாளர் டி.மனோகரன், நிர்வாகிகள் கதிர்வேல், சசிக்குமார், நாகராஜ், AIIEA நிர்வாகிகள் முன்னனி ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதன்பின்பு சேலம் மாநகராட்சி அலுவலகத்தில் இலவச ஆம்புலன்ஸ் வாகனத்தை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையர் N.ரவிச்சந்திரன் அவர்கள் இச்சேவையை வெகுவாக பாராட்டியதோடு, மாநகரத்தில் உள்ள ஏழை மக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் பயண்படுத்திக்கொள்ள கேட்டுகொண்டார். அப்போது மாநகராட்சி சுகாதார அலுவலர் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி ஆகியோர் உடனிருந்தனர்.