தமிழகம் தற்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது – முதல்வர் ஸ்டாலின்

தமிழகம் தற்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடியில் உள்ளது என்று முதல்வர் மு..ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

முதல்வர் மு..ஸ்டாலின் காணொலி வாயிலாகப் பங்கேற்ற நிகழ்வில், வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA) மற்றும் அமெரிக்க வாழ் தமிழ் மக்கள் இணைந்து, கொரோனா தடுப்புப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நான்கு லட்சம் அமெரிக்க டாலர்களை (சுமார் ரூ.3 கோடி) நிதியாக வழங்கினர்.

இவர்கள் ஏற்கனவே ரூ.20 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் ராஜன் நடராஜன், பாலா சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பி, பாலகன் ஆறுமுகசாமி, ஜோதி ராதாகிருஷ்ணன், ராம் பிரசாத், உள்ளிட்டோர் பங்கேற்றனர்

Translate »
error: Content is protected !!