தேனியில் மா, பலா அமோக விளைச்சல்.. பொது முடக்கத்தால் விற்பனை செய்ய முடியாத நிலை.. அச்சத்தில் பலா விவசாயிகள்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் மா,பலா அமோக விளைச்சல், கொரோனா இரண்டாவது அலை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் விளைச்சல் அடைந்துள்ள பலாவை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் என அச்சத்தில் பலா விவசாயிகள்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றி உள்ள கும்பக்கரை சோத்துப்பாறை முருகமலை மஞ்சளார் அணை உள்ளிட்ட  பகுதியில் அதிக அளவில் விவசாயிகள் மா விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். மா விவசாயத்தின் ஊடு பயிராக செம்பலா தேன்பலா வருக்கைபலா கரிப்பலா உள்ளிட்ட ரகங்களை மா விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

இந்த ஆண்டு மாங்காய் நல்ல விலைச்சல் அடைந்தும் விற்பனை செய்ய முயாததால் மாந்தோப்புகளில் மாங்காய்கள் சேதம் அடைந்து உதிர்ந்து வரும் நிலையில் பலா விவசாயமாவது கை கொடுக்குமா என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதுமேலும் ஒரு சிறிய பலாவின் விலை 100 ரூபாய் முதல் பெரிய பலா 500 ரூபாய் வரை  விற்பனை ஆகும் நிலையில் மேலும் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டால் பலா விவசாயத்தில் வருவாய் இழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

Translate »
error: Content is protected !!