தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை வள்ளுவர் சிலை அருகில் தணியார் மருத்துவமனைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகள், ஊசி, நீடில், மருந்து பாட்டில், பயன் படுத்திய முகக்கவசம், கையுறை, குளுக்கோஸ் பாட்டிலில், காலாவதியான மருந்து மாத்திரைகள் மற்றும் மருந்து கடைகளில் பயன்படுத்திய மருத்துவ கழிவுகளை சாலை ஓரம் கொட்டி உள்ளதாள் நோய் தோற்று பரவும் அபாயம் உள்ளது.
மேலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தின் அருகில் பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் பைப் மற்றும் அருகில் வராகநதி செல்வதால் மருத்துவக் கழிவு வராகநதி நீரில் கலந்து பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் தற்போது கொரொனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இது போன்ற மருத்துவ கழிவுகளை சாலையோரம் மற்றும் குப்பையில் கொட்டி வருபவர்கலாள் மேலும் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இது போன்ற மருத்துவ கழிவுகலை கொட்டி சமூக விரோத செயலில் ஈடுபடும் நபர்கள் மீது மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இதுபோன்ற செயல்கள் அடிக்கடி நடப்பதகவும் இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் புகார் அளித்தும் இதுவரை யாரும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.