உடல் நிலையில் தற்போது முன்னேற்றம் உள்ளதாகவும், அனைவரையும் சந்திக்க விரும்புவதாகவும், கிரிக்கெட் ஜாம்பவானாக திகழ்ந்த கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனான 61 வயது கபில் தேவ், திடீர் மாரடைப்பு காரணமாக கடந்த 23ம் தேதி டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையறிந்து அவரது ரசிகர்கள் கவலையடைந்தனர். சமூகவலைதளங்களில் கபில்தேவை வாழ்த்தியும், வேண்டியும் பதிவிட்டனர்.
இதற்கிடையே, மருத்துவமனையில் கபில்தேவிற்கு ஆஞ்சிபிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதன் பின் சில நாட்கள் மருத்துவமனையில் இருந்துவிட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இது குறித்து கபில்தேவ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், முழுமையாக தாம் குணமடைந்து திரும்பி இருப்பதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இப்போதுதான் முன்பை விடமிகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், விரைவில் அனைவரையும் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் கபில்தேவ் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.