திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே கீழ்மலை பகுதிகளான தாண்டிகுடி , பண்ணைகாடு , பாச்சலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் அமைந்துள்ளது.
இந்த கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருந்து வருகிறது . இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் பல்வேறு மாவட்டங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து யானை அடிக்கடி ஊருக்குள் நுழைந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று தாண்டிக்குடி பகுதியில் எதிரொலி பாறை செல்ல கூடிய சாலையில் வாகனங்களை ஒற்றை காட்டுயானை வழிமறித்தது. மேலும் வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை சாலையின் ஓரத்தில் இருந்து சாலையை கடந்ததால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. பல முறை வனத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அபகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே வனப்பகுதிக்குள் இருந்து ஊருக்குள் வரும் யானையை விரட்ட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.