சீனாவின் சாங்ஷாவில் உள்ள 10 மாடி கட்டிடம் பிராட் குழுமத்தால் 28 மணி 45 நிமிடங்களில் கட்டி முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிறுவனம் கட்டிடத்தின் 4 நிமிட வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளது. அதில், எளிதான முறையில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று. குடிநீர் மற்றும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கட்டுமான பணிகள் தொடங்கியதும், சுவர்கள், ஜன்னல்கள் மற்றும் அலமாரிகள் ஒன்றாக வைக்கப்பட்டு,போல்ட்களால் இறுக்கி, ஒவ்வொரு தளத்தையும் முழுமையாக முடித்த பின் கட்டிடத்திற்கு மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.