பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன.
கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் அமெரிக்காவில் முதல் நாடாக பிரேசில் உள்ளது. கொரோனா இறப்பு விகிதத்தில் பிரேசில் உலகில் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா மற்றும் இந்தியாவிற்கு அடுத்தபடியாக கொரோனா பாதிப்புகளில் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 41,878 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. பிரேசிலில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 கோடி 79 லட்சம் 69 ஆயிரம் 806 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் மேலும் 899 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,02,817 ஆக உயர்ந்தது. இதுவரை, 1,62,20,238 பேர் கொரோனா நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர், தற்போது 12,46,751 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.