தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் மலைக்கோவிலின் மலையைச் சுற்றி கிரிவலப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. கிரிவலப்பாதையில் பொதுமக்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
இந்நிலையில் கிரிவலப் பாதைக்கு மேல் உள்ள மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை அப்பகுதியில் உள்ள விவசாயி ஒருவர் செல்போனில் விடியோ எடுத்து பெரியகுளம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்நிலையில் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பெரியகுளம் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார் மற்றும் பெரியகுளம் தென்கரை பேரூராட்சி நிர்வாகம் சேர்ந்து கைலாசநாதர் கோவிலின் கிரிவலபாதை பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்றும் அந்த பகுதியில் விவசாயப் பணிகளுக்குச் செல்லும் விவசாயிகள் மாலை நேரங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று தேனி வனச்சரகர் சாந்தக்குமார் சிறுத்தை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில் 3 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி சிறுத்தை நடமட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சிறுத்தை நடமாட்டம் குறித்து வனச்சரகர் கூறுகையில் சிறுத்தை நடமாட்டத்தை நாள்தோரும் கண்காணித்து அதன் பின்பு கூண்டு வைத்து பிடிக்கும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவப்த்தார். மேலும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் வரை கைலாசர்நாதர் மலைக்கோவில் கிரிவலப்பாதையில் பகதர்கள், பொதுமக்கள் குழந்தைகளுடன் தனியா செல்லவேண்டாம் என கேட்டுக்கொண்டார். மேலும் கைலாசநாதர் மலைக்கோவிலுக்கு செல்லும் சாலைகளில் காவல்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளது குறித்து எச்சரிக்கை பதாகைகள் வைத்து அந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்களுக்கு அறிவுருத்தி வருகின்றனர்.