அமெரிக்காவுடன் சமமான உறவுகளை விரும்புகிறது பாகிஸ்தான் – இம்ரான் கான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் தற்போது இருப்பதை போலவே பாக்கிஸ்தான் அமெரிக்காவுடன் நாகரிக மற்றும் சமமான உறவை நாடுகிறது என்று கூறியுள்ளார். நியூயார்க் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், அவர் பாகிஸ்தான் பிரதமரான உடனேயே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை அணுகிய போதிலும், இந்தியாவுடனான உறவை சீராக்க அவர் மேற்கொண்ட முயற்சிகள் எந்த முன்னேற்றத்தையும் அடையவில்லை என கூறினார்.

பாகிஸ்தான் பிரதமர் ​​இம்ரான் கான், கடந்த காலங்களில் இந்தியா போன்ற பிராந்தியத்தில் இருந்த வேறு எந்த நாட்டையும் விட பாகிஸ்தான் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருந்தது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் அமெரிக்காவின் நட்பு நாடக இருந்ததாகவும் அவர் கூறினார். துரதிர்ஷ்டவசமாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரின்போது இந்த உறவில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அதை மீட்டெடுக்க விரும்புவதாகவும் இம்ரான் கான் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!