கொரோனா வைரஸ் பரவுவதை முற்றிலுமாகத் தடுத்துள்ள தென் கொரியா, இப்போது மீண்டும் வைரஸ் பரவுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 800 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இன்று 794 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணியும் அங்கு முழு வீச்சில் நடப்பதாக கொரிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.