ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 23,543 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .
ரஷியாவில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 55,38,142 ஆக அதிகரித்துள்ளது . மேலும் 672 பேர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 1,35,886 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், கொரோனாவிலிருந்து 16,928 பேர் மீண்டுள்ளனர். இதனால் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையை 5,017,321 ஆக உயர்ந்துள்ளது.