கொடைக்கான‌லில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்ப‌தால் பொதும‌க்க‌ள் அதிர்ச்சி

கொடைக்கானலில் பெட்ரோல் விலை 105.84 ரூபாய்க்கு விற்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஏறி வருகிறது ..இந்நிலையில் நாளுக்கு நாள் பெட்ரோல்விலை உயர்வால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து அத்தியவசிய பொருட்கள் மற்றும் ட்டுமான‌ பொருட்களின் விலை உயர்வாலும் பெட்ரோல் விலை  படிப்படியாக  உயரத் தொடங்கியதுதற்போது தமிழகத்தில் அதிக படியாக ஸ்பீட் பெட்ரோல் விலை ரூபாய்105.84  பைசாவுக்கும்  டிசல் விலை ரூபாய்  96.18 பைசாவுக்கு   கொடைக்கானலில்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதனால் வாகன  ஓட்டிகள் பெட்ரோல் விலை உயர்வால்  தங்களின் அன்றாட தேவைகளுக்கும் சென்று வர முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர் ..மத்திய அரசு நாளுக்கு நாள் பெட்ரோல் விலை உயர்த்தி வருவதுபொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. பெட்ரோல் டீசல்  விலையை  குறைக்க   வேண்டுமென கோரிக்கையும்  எழுந்துள்ளது .

Translate »
error: Content is protected !!