தமிழ்நாடு உருது அகாடமி துணைத்தலைவர் நயீமுர் ரஹ்மானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள் மனக்குமுறலுடன் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள் மனக் குமுறலுடன் கூறியதாவது, ‘‘
தற்போது தமிழகத்தின் உருது அகாடமி துணைத் தலைவராக இருப்பவர் நயீமுர் ரஹ்மான். இவர் இந்த பதவியை நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்புதான் பெற்றார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு வக்ப் போர்டு சேர்மனாக இருந்த தமிழ்மகன் உசேனுக்கு ஒரு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்து நயீமூர் ரஹ்மான் சென்னை நந்தனம், அண்ணாசாலையில் உள்ள நந்தனம் பள்ளிவாசலின் முத்தவல்லி பதவியைப் பிடித்தார்.
அதன்மூலம் மசூதி சொத்தில் வசிப்பவர்களை மிரட்டி பணம் பறிப்பது இவருக்கும் இவரது தம்பி முஜிபுர் ரஹமானுக்கும் வாடிக்கையாகவே இருந்தது. இதனை வைத்துக்கொண்டு பாஜகவில் தன்னை பிஜேபி காரன் என்று சொல்லிக் கொண்டு இந்திய ஒன்றிய அரசின் சிறுபான்மை நலத்துறையின் தமிழகத்தின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியையும் நயீமுர் ரஹ்மான் பெற்றுக்கொண்டார்.
ஆனால் அதனை பெற்றுக் கொண்டு இஸ்லாமிய சமூகத்திற்கு அவர் எதுவும் செய்யவில்லை. 2017ம் ஆண்டு தமிழ்நாடு வக்பு வாரிய முத்தவல்லிகளுக்கான உறுப்பினர் தேர்தலில் இவர் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்தார். இவரைப் பொருத்தவரை பேச்சு இனிமையாய் இருக்கும். ஆனால் எதுவுமே செய்ய மாட்டார் . இவருக்கு 100 போன் செய்தாலும் இவர் ஒரு முறையும் போன் எடுக்க மாட்டார். கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் நாங்கள் அனைவரும் உங்களுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றும் எங்கள் பின்னால் உருது பேசும் முஸ்லிம்களின் வாக்குகள் உள்ளன என்றும் பொய் சொல்லி கடந்த ஆட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நம்ப வைத்தார். மேலும் அப்போதைய உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு ஒரு பெரும் தொகையை லஞ்சமாக கொடுத்து உருது அகாடமி துணைத் தலைவர் பதவியை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு பெற்றார்.
இப்போது முதல்வர் முதல்வர் ஸ்டாலினையும், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானிடமும் சென்று தன்னை மாபெரும் தலைவர் என்றும், இஸ்லாம் சமுதாயத்திற்கு செய்வதற்கு நிறைய நலத்திட்டங்களை அமல்படுத்த இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அவருக்கு தலைமைச் செயலகத்தில் தனி அலுவலகம் வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் பொய்யனை உடனடியாக உருது அகாடமியின் துணைத்தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அவர் தொடர்பாக உளவுத்துறை மூலம் திமுக சிறுபான்மை நலப்பிரிவு நிர்வாகிகளிடம் கேட்டால் உண்மை நிலவரம் தெரிய வரும். இஸ்லாமியர்களுக்கு நன்மை செய்வதாக கூறி அவர்களுக்கு விரோதமாக நடந்து கொள்ளையில் ஈடுபட்டு வரும் நயீமுர் ரகுமானை உடனடியாக பதவி நீக்கம் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே திமுக சிறுபான்மை நல உரிமை பிரிவு நிர்வாகிகள்ச சார்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்’’ இவ்வாறு தெரிவித்துள்ளனர்.