தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை  மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு எனவும்  நீலகிரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு  எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு எனவும், அதிகபட்சமாக வத்திராயிருப்பில் 11 செ.மீ, ஸ்ரீ வில்லிப்புத்தூரில் 9 செ.மீ, மாரண்டஹள்ளியில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Translate »
error: Content is protected !!