தொலைத்தொடர்பு பிரச்சனை, ஸ்மார்ட் போன் இல்லாமல் கல்வியை தொடர முடியாமல் தவிக்கும் பழங்குடியின மாணவ மாணவிகள்

கொரோன ஊரடங்கு காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக செயல்படாத பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நம்பி கல்விக்காக காத்திருக்கும் மலைகிராம மாணவ மாணவிகள்தொலைத்தொடர்பு  பிரச்சனை, ஸ்மார்ட்  போன்  இல்லாமல்  கல்வியை  தொடர  முடியாமல்  தவிக்கும்  பழங்குடியின  மாணவ மாணவிகள்.

உலகம் முழுக்க கொரோன பரவிய தொடங்கிய சில நாட்களிலேயே பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன குறிப்பாக இந்தியாவில் முதல் அலையில் மூடப்பட்ட பள்ளிகள் தற்போது வரை ஒரு சில பள்ளிகள் திறக்க படாமலேயே இருக்கின்றன கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகள் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே தங்களுடைய கல்வியை தொடர்ந்து வருகின்றனர்.

மேலும் ஒரு வருடம் மட்டும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த கொரோன தற்போது மீண்டும் பரவத் துவங்கி இருக்கிறது இதனால் ஆன்லைன் வகுப்புகள் மூலமாகவே மாணவிகள் மற்றும் மாணவர்கள் பாடம் கற்பித்து வருகிறார்கள்.

மேலும் மலை பகுதிகளில் இது சாத்தியமாக இருந்தாலும் மலைப் பகுதிகளில் இது சாத்தியமில்லாத தாக இருக்கிறது குறிப்பாக கொடைக்கானலை பொருத்தவரையில் கொடைக்கானல் நகர் மற்றும் மேல்மலை மற்றும் கீழ்மலை கிராமங்கள் என 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த பகுதியில் இருக்கின்றன இதில் 77 பழங்குடியின கிராம மக்களும் கொடைக்கானல் மலைப்பகுதியில் வாழ்ந்துவருகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாகவே தனியார் மற்றும் அரசு பள்ளிகள் செயல்படாத நிலையில் கல்வியை விட்டுவிட்டு தோட்டத்து வேலைக்கும் கூலி வேலைகளுக்கும் மாணவர்களை அனுப்பக்கூடிய நிலை தற்போது ஏற்பட்டு வருகிறது கொடைக்கானல் மலைப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் தொலைத்தொடர்பு பிரச்சினைகள் கடந்த பல வருடங்களாகவே இருந்து வருகிறது.

தற்போது இந்த ஆன்லைன் வகுப்பிற்கு இணையதள சேவை முக்கியமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் இணையதள சேவைகள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது இதனால் தங்களுடைய ஆன்லைன் வகுப்புகள் பள்ளிகளிலிருந்து நடைபெற்றாலும் அதனை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது இது மட்டுமல்லாது பழங்குடியின கிராமங்களில் மாணவமாணவிகளுக்கு  கல்வி  எட்டாக்கனியாக  இருந்த  நிலையில்   கடந்த  சில  வருடங்களாக  மட்டும்தான்  அவர்கள்  பள்ளிகளுக்கும்  அங்கன்வாடிகளுக்கு சென்று வருகிறார்கள். 

தற்போது  இதுவும்  மூடுவிழா  காணபட்டுள்ளதால் ஆன்லைன்  வகுப்புகள்  என்னவென்றே  தெரியாத  நிலையில்  தவித்து வருகிறார்கள் ஆதிவாசி மாணவமாணவிகள்  இந்த  நிலை  நீடித்தால்  உம் ஆசிரியர்கள்  சார்பாக தெரிவிக்கும்போது மாணவமாணவிகளுக்கு  ஆன்லைன்  மூலமாக  பாடங்களை கற்பிக்கும்  போது  அவர்கள்  இதனை  விட்டுவிட்டு  இணையதள  விளையாட்டுகளில்  கூறுவதாகவும் இதனை பல பெற்றோர்கள் கவனிக்காததால் அவர்கள் கல்வியைத் தொடர்வதில் சிக்கல் தொடர்ந்து நீடித்துவருவதாக ஆசிரியர்கள் சார்பாக தெரிவிக்கிறார்கள்.

மேலும் கல்வியை தொலைத்து இருக்கக்கூடிய மாணவ மாணவிகள் இங்கு இருக்கக்கூடிய கூலி வேலைகளுக்கும் தோட்டத்து வேலைகளுக்கும் செல்லக் கூடிய அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருப்பதாக கவலை தெரிவிக்கிறார்கள் மலைகிராம பெற்றோர்கள் மாணவர்களுக்கு இந்த  நிலை இருக்கும் போது மாணவிகளைப் பொறுத்த வரையில் அவர்களை தனியாக வீட்டில் விட்டுச் சென்றால் பல்வேறு இன்னல்களுக்கு அவர்கள் தள்ளப்படுவது ஆகவும் இதனாலேயே சிறுவயதில் குழந்தை திருமணம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் வெளியாகக் கூடிய செய்தி அச்சத்தையும் பயத்தையும் மாணவ மாணவிகள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது கல்வியை தொலைத்த மாணவ-மாணவிகளுக்கு  உகந்த முறையில் கல்வியை திரும்ப தர தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மலைகிராம பெற்றோர்கள

Translate »
error: Content is protected !!