தமிழக அரசு வெளிட்டுள்ள அரசாணையில் கூறியது,
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது மூன்று ஆண்டுகள் அல்லது ஏழு லட்சம் கிலோமீட்டர். இது எதிர்காலத்தில் ஏழு ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ.க்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவு பேருந்துகளைத் தவிர மற்ற அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது ஏழு லட்சம் கிலோமீட்டர் அல்லது ஆறு ஆண்டுகள் என்று கூறப்படுகிறது. இது எதிர்காலத்தில் ஒன்பது ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ வரை நீட்டிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பம், புதிய சாலை வசதிகள் மற்றும் நவீன வடிவமைப்பு காரணமாக பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து செயலாளர் தயானந்தா கட்டாரியா தெரிவித்துள்ளார்.