ஆன்லைனில் சிரமம்.. அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு ஏற்பாடு – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் கூடுதல் பொதுச் செயலாளர் நசிமுத்தின், அனைத்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில், ஒவ்வொரு ரேஷன் கடையும் புகார் பதிவேட்டை பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். புகார்களை ஆன்லைனில் தெரிவிக்க பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக புகார்கள் வந்துள்ளன. சிரமத்தை குறைக்க, அந்தந்த கடைகளில் நேரடியாக புகாரை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கும் வகையில் புகார் பதிவேட்டை  வைக்க வேண்டும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!