உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், 4-வது இடத்தில் பிரான்ஸ் உள்ளது.
உலகளவில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை18,96,99,239 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவிலிருந்து 17,31,28,624 கோடி பேர் மீண்டுள்ளனர். மேலும், இதுவரை 40 லட்சத்து 82 ஆயிரத்து 591 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 12,488,024 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.